இரவு அதிக நேரம் செயல்பட்டதால் ஆர்யன்கான், ஷில்பா ஷெட்டி கேளிக்கை விடுதிகள் மீது வழக்கு

கேளிக்கை விடுதி அதிகாலை 1.30 மணி வரை செயல்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-12-17 07:31 IST

பெங்களூரு,

பெங்களூரு கப்பன் பூங்கா பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு சொந்தமான கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற ஆர்யன்கான் கைவிரல்களால் ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் அவரது கேளிக்கை விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதி அதிகாலை 1.25 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கப்பன் பூங்கா போலீசார் அந்த கேளிக்கை விடுதியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் கடந்த வாரம் தொழில் அதிபர் ஒருவர், இரவு விருந்து குறித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்தும் அவரது விடுதியின் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, அவரது கேளிக்கை விடுதியும் அதிகாலை 1.30 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்