''இவை உண்மையானவை, ஏஐ புகைப்படங்கள் இல்லை'' - சாய் பல்லவி
நீச்சல் உடை சர்ச்சைக்கு சாய் பல்லவி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.;
சென்னை,
நடிகை சாய்பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பின்னர் இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சாய்பல்லவி இதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார். ''இவை உண்மையானவை, ஏஐ புகைப்படங்கள் இல்லை'' என்று தலைப்பிட்டு அந்த வீடியோவை வெளிட்டுள்ளார்.
சமீப காலமாக பல நடிகைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள், போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இது திரையிலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.