சிம்புவின் 49-வது படத்தில் இணையும் சாய்பல்லவி?

சிம்புவின் 49-வது படத்தை 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.;

Update:2025-02-10 08:42 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடித்த 'மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல' என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதனையடுத்து, அவருடைய 49-வது படத்தை 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு கல்லூரி பேராசிரியர் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளநிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்