முதல் நாள் வசூலில் ''பதான்'', ''டைகர் 3''க்கு அடுத்து...திரைத்துறையை அதிர வைத்த ''சயாரா''
முதல் நாளில் ரூ. 21.25 கோடி என்ற மிகப்பெரிய வசூலை ஈட்டி இருக்கிறது ''சயாரா''.;
சென்னை,
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த 'சயாரா' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறிய நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் நேற்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், முதல் நாளில் ரூ. 21.25 கோடி என்ற மிகப்பெரிய வசூலை ஈட்டி இருக்கிறது.
இதன் மூலம், கொரோனா காலத்திற்கு பிறகு யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி பெரிய ஓபனிங் கொடுத்த 3-வது படமாக 'சயாரா' சாதனை படைத்திருக்கிறது. பதான் ரூ. 55 கோடி மற்றும் டைகர் 3 ரூ. 43 கோடி வசூலித்தது. இதே வேகத்துடன் சென்றால், சயாரா விரைவில் ரூ. 100 கோடி கிளப்பில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.