’தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது’...பகிர்ந்த சம்யுக்தா மேனன்
“அகண்டா 2: தாண்டவம்” படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
“அகண்டா 2: தாண்டவம்” வருகிற 5-ம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ஐதராபாத்தில் ஒரு பிரீரிலீஸ் நிகழ்வை நடத்தினர். இதில் படக்குழுவினர் அவைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா மேனன் பேசுகையில்,
’நான் ’வாத்தி’ படப்பிடிப்பில் இருந்தபோது, தனுஷ் 'அகண்டா' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதில் தமன் தன்னை மிகவும் ஈர்த்ததாக அவர் கூறினார். அவருக்கு அகண்டா மிகவும் பிடித்திருந்தது. அப்போதிருந்து, இந்தப் படத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது" என்றார்.
போயபதி ஸ்ரீனு இயக்கும் “அகண்டா 2: தாண்டவம்” படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.