விஜய்யின் ’ஜன நாயகன்’ - வெளியான சுவாரசிய தகவல்
அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
விஜய்யின் ஜன நாயகன் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படம் விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் பிரியாவிடை அளிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், ’ஜன நாயகன்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அன்படி, ஜன நாயகனில் கிட்டத்தட்ட 60 சதவீத காட்சிகள் பகவந்த் கேசரியைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜன நாயகனில் விஜய்யின் பெயர் தளபதி வெற்றி கொண்டான் என்று கூறப்படுகிறது, இது பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவின் 'நெலகொண்டா பகவந்த் கேசரி' பெயரை ஒத்திருக்கிறது,
இருப்பினும், விஜய் ரசிகர்களை பரவசப்படுத்தும் அம்சங்களுடன் ஜன நாயகனில் பல காட்சிகளை இயக்குனர் எச்.வினோத் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க மாஸ் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஜன நாயகன் படத்தை கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.