"நாங்கள்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கிய நாங்கள் படம் வருகிற டிசம்பர் 12ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-11-30 05:50 IST

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் திரைப்படம் 'நாங்கள்'. திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்'மற்றும் 'அழகு குட்டி செல்லம்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த வேத் ஷங்கர் சுகவனம் 'நாங்கள்' படத்திற்கு இசையமைத்துள்ளார். லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.

இப்படம் வருகிற டிசம்பர் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் திரைப்படமான 'நாங்கள்' ராட்டர்டாம் மோஸ்ட்ரா சா பாவ்லோ, ஜியோ மாமி உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்