விக்ரம் பிரபு நடித்த 'சிறை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

விக்ரம் பிரபு, அனந்தா நடிக்கும் ‘சிறை’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-11-29 23:36 IST

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிக்கும் ‘சிறை’ படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கதை சிவகங்கை பின்னணியில் நடக்கிறது

ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, நாயகியாக அனந்தா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்‌ஷய் குமார் அறிமுகமாகி உள்ளார்.

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான மன்னிச்சிரு என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சத்ய பிரகாஷ், ஆனந்தி ஜோஷி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஜஸ்டின் பிரபாகரன் எழுதியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்