சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் பறிப்பு

கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.;

Update:2025-11-30 01:52 IST

கன்னட திரைஉலகில் பிரபல நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே சிறையில் கைதிகள் மதுகுடித்துவிட்டு நடனமாடி கும்மாளமிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறையில் முறைகேடுகளை தடுக்க அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில், தர்ஷனுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளது.

அதாவது தர்ஷன், தான் அடைக்கப்பட்டு இருக்கும் பாரக் கட்டிடத்தில் இருந்தே உணவு சாப்பிட்டு வந்தார். மேலும், நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்