பிரீத்தி முகுந்தனின் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு

பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள மைனே பியார் கியா படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-08-20 13:08 IST

சென்னை,

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இவர் தற்போது 'மைனே பியார் கியா' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில், கதாநாயகனாக சமீபத்தில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த ஹிருது ஹாரூண் நடித்திருக்கிறார். பைசல் பாசிலுதீன் இயக்கி உள்ள இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'மனோகரி' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்