ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-11-02 20:39 IST

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார். இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் இம்முறை ரசிகர்களை தம்மால் சந்திக்க முடியாமல் போனதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஷாருக்கான் , “வெளியே வந்து நின்று உங்கள் அனைவரையும் பார்க்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். காரணம், பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றனர். இதற்காக உங்களிடம் ஆழ்ந்த வருத்த்த்தை தெரிவிக்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதைக் கருதி நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை புரிந்துகொண்டு என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி... நீங்கள் என்னைப் பார்க்க முடியாமல் தவிப்பதைவிட நான் உங்களை பார்க்க இயலாமல் போனது மிகுந்த வருத்தம். ” என்று தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்