2025-ம் ஆண்டுக்கான ஸ்டைலிஸ் பிரபலங்கள் பட்டியலில் ஷாருக்கான்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2025ம் ஆண்டின் ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவின் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார்.;
தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக வென்றுள்ளார். லண்டனில் உள்ள லெஸ்டர் கொயரில் ஷாருக்கான் கதாபாத்திர வெண்கல சிலைநிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2025-ம் ஆண்டுக்கான ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் ஷாருக்கான் இடம்பிடித்து அசத்தியுள்ளார். சப்ரினா கார்பென்டர், விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்ஸிங்கர், வால்டன் கோகின்ஸ், ஜெனிபர் லாரே உள்ளிட்ட 67 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவின் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.