திருமணத்தை ரத்து செய்தாரா நிவேதா பெத்துராஜ்?
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கடைசி நேரத்தில் பலாஷ் முச்சலுடனான தனது திருமணத்தை ரத்து செய்தார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
தற்போது, நடிகை நிவேதா பெத்துராஜும் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமிரு புடிச்சவன், டிக் டிக் டிக் பட நடிகையான இவர், சமீபத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானை அறிமுகப்படுத்தினார். விரைவில் திருமண தேதியை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், நிவேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜித்தும் நிவேதாவும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும், ரஜித்தும் சமூக ஊடகங்களில் தங்கள் படங்களை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊகங்களுக்கு நடிகை நிவேதா பதிலளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.