டப்பிங் பணியில் ஸ்ருதிஹாசன்...'கூலி' படத்திற்காகவா?
ஸ்ருதிஹாசன் தற்போது கூலி, டிரெயின், ஜன நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.;
சென்னை,
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கடைசியாக தமிழில் லாபம் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது கூலி, டிரெயின், ஜன நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளார். ஆனால், எந்த படத்திற்காக என்று குறிப்பிடாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.