திருமண வதந்திகளுக்கு பதிலளித்த ஈஷா ரெப்பா
தருண் பாஸ்கரும் ஈஷா ரெப்பாவும் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன.;
சென்னை,
தெலுங்கு பட இயக்குனரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி'. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் ரீமேக்கான இந்தப் படம், பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சமீப காலமாக, தருண் பாஸ்கரும் ஈஷா ரெப்பாவும் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன. இதற்கு இருவரும் எந்த பதிலும் தெரிவிக்காதநிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனின்போது இந்த செய்திக்கு ஈஷா ரெப்பா பதிலளித்தார்.
அது புரமோஷனின் ஒரு பகுதிதான் என்றும் திருமண செய்திகளைப் பற்றி தான் அதிகம் கவலைப்படவில்லை என்றும் கூறினார். மேலும், ’நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை நம்மால் ஒருபோதும் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.