பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படம் முழுவதுமாக காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடிக்கிறார். மேலும், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துவருகிறார்.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையல் 'டியூட்' படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.