சிவகார்த்திகேயனின் “பராசக்தி” டிரெய்லர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2026-01-04 18:03 IST

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. ‘அடி அலையே’, ‘ரத்னமாலா’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

‘பராசக்தி’ ​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்டகார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, ‘பராசக்​தி’ பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்​பித்தனர். பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இது கண்​காட்​சி​யாக உரு​வாக்​கப்​பட்​டது.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்