அதிக ரூ.1,000 கோடி படங்களில் நடித்தவர்.... பிரபாஸ், ஷாருக்கான் இல்லை - யார் அவர் தெரியுமா?
அவர் அந்த படங்களில் கதாநாயகனாக இல்லை, வில்லனாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.;
சென்னை,
இந்த நடிகர் பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மூன்று படங்கள் ரூ.1,000 கோடி வசூல் கிளப்பிலும் இடம்பிடித்துள்ளன. அவர் அல்லு அர்ஜுனோ, ஷாருக்கானோ, பிரபாஸோ இல்லை.
அவர் அந்த படங்களில் கதாநாயகனாக இல்லை, வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவர் வேறு யாரும் இல்லை சஞ்சய் தத்தான். இவர் நடித்த கே.ஜி.எப் 2, ஜவான் மற்றும் துரந்தர் ஆகிய 3 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தன.
சஞ்சய் தத், துரந்தர் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சஞ்சய் தத் தமிழில், லியோ படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சஞ்சய் தத் ,பிரபாஸுடன் தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ம் தேதி தமிழிலும் மற்ற மொழிகளில் 9-ம் தேதியும வெளியாக உள்ளது.