’சிறப்புப் பாடல்...அந்த 4 இயக்குனர்கள் படத்தில் மட்டும்தான் நடிப்பேன்’ - ராஷ்மிகா மந்தனா

தான் சிறப்புப் பாடல்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக ராஷ்மிகா கூறினார்.;

Update:2025-11-10 15:45 IST

சென்னை,

’தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் மூலம் இந்த ஆண்டின் 4-வது வெற்றியை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அவர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் தான் சிறப்புப் பாடல்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எனக்கு பிடித்த அந்த நான்கு இயக்குனர்கள் படங்களில் இருந்து வாய்ப்பு வந்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்வதாகவும் ராஷ்மிகா மந்தனா கூறினார். ஆனால், அந்த இயக்குனர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.

மேலும், பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும்,  'தம்மா' படத்தில் உள்ள ஒரு பாடலை கெரியரில் "மிகவும் வித்தியாசமான மற்றும் கடினமான" பாடல் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்