''ராமாயணத்தில் அனுமனாக நடிப்பது பெரிய சவால்'' - சன்னி தியோல்

ராமாயணம் படம் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாக தயாராகிறது.;

Update:2025-08-16 19:30 IST

சென்னை,

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சன்னி தியோல், தனது கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராமாயணம்' படத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சில நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன்.

அனுமனாக நடிப்பது பெரிய சவால். இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது பயம், பதட்டம் ஏற்படும். அதை தவிர்க்க முடியாது'' என்றார்.

ராமாயணம் படம் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாக தயாராகிறது. முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்