ரேணுகாசாமி கொலை வழக்கு: வீட்டு உணவை சாப்பிட பவித்ரா கவுடாவுக்கு அனுமதி

கொலை வழக்கில் சிறையில் உள்ள பவித்ரா கவுடாவுக்கு வீட்டில் சமைத்த உணவை சாப்பிட நீதிபதிகள் அனுமதித்துள்ளனர்.;

Update:2025-12-31 06:55 IST

பெங்களூரு,

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ரேணுகாசாமியின் கொலை வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ரேணுகாசாமியின் தாயார் ரத்னபிரபா அளித்த வாக்குமூலம் முரணாக இருப்பதால் அதை கோர்ட்டு ஏற்றுக் கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த மாதம்(ஜனவரி) 5-ந் தேதி அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறையில் உள்ள பவித்ரா கவுடா மற்றும் நாகராஜூ, லட்சுமணன் ஆகியோர் தாங்கள் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்