''சூப்பர்மேன்'' படத்தின் அடுத்த பாகம்....பெயர், ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் மேன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.;
சென்னை,
டிசி நிறுவனம் தயாரித்த சூப்பர்மேன் படத்தின் மாபெரும்வெற்றிக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கன் அதன் அடுத்த பாகத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
இப்படத்திற்கு ''மேன் ஆப் டுமாரோ'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 2027 இல் ஜூலை 9 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதன் முதல் பாகம் ( சூப்பர் மேன்) வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.
டிசி ஸ்டுடியோஸில் அடுத்ததாக, ''சூப்பர் கேர்ள்'' படம் அடுத்தாண்டு ஜூன் 26 அன்று வெளியாக உள்ளது, அதைத் தொடர்ந்து திகில் படமான ''கிளேபேஸ்'' அடுத்தாண்டு செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது.