'கோர்ட்' பட கதாநாயகன் ஹர்ஷ் ரோஷனை பாராட்டிய சூர்யா

சமீபத்தில் 'கோர்ட்' படத்தை பார்த்த நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி படக்குழுவை பாராட்டி இருந்தனர்.;

Update:2025-04-27 19:07 IST

சென்னை,

நடிகர் நானி தயாரிப்பில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவான படம் 'கோர்ட்'. இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகனாக ஹர்ஷ் ரோஷனும் கதாநாயகியாக ஸ்ரீதேவி அப்பல்லாவும் நடித்திருந்தனர்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.50 கோடிக்கும் மேல் வசூலை குவித்து அசத்திது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் சமீபத்தில் 'கோர்ட்' படத்தை பார்த்த நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி படக்குழுவை பாராட்டி இருந்தனர். இந்நிலையில், கதாநாயகன் ஹர்ஷ் ரோஷனுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை ஹர்ஷ் ரோஷன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், இந்த அன்பு என்னுடன் எபோதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்