சூர்யாதான் ரியல் சூப்பர் ஸ்டார் - ஜோஜு ஜார்ஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.;
கேரளா,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டார்.
நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைப்பெற்றது. அதில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் " நான் ஒரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக சூர்யா சாருக்கு ஒரு லவ் லெட்டராவது கொடுத்திருப்பேன். அவருடைய தோற்றத்திற்கும், அழகுக்கும் மட்டும் நான் அதனை கொடுத்திருக்க மாட்டேன். அவருடைய மனதிற்கும், கண்ணியத்திற்கும், அவர் செய்யும் நல்ல காரியத்திற்கும் கொடுத்திருப்பேன். அவரை பற்றி அவ்வளவு அதிகம் உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு உங்களுக்கு பிடிக்கும் மேலும் அவர் ரியல் சூப்பர் ஸ்டார்" என கூறினார்.
ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர். ரெட்ரோ மற்றும் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் ஜோஜு ஜார்ஜ், பணி என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக ரீதியாக வெற்றிப்படமாகியுள்ளது.