“சுயம்பு” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
‘சுயம்பு’ படம் ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.;
நிகில் சித்தார்த்தா கதாநாயகனாக நடிக்கும் வரலாற்றுப் படம், ‘சுயம்பு’. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர்.
பரத் கிருஷ்ண மாச்சாரி இயக்கியுள்ள இப்படத்தில் சம்யுக்தா, நபா நடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகிஉள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டது.
இந்நிலையில் இது வரலாற்றுப் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கின்றன. இதனால் அது முழுமையாக முடிந்த பின் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் இப்படம் ஏப்ரல் 10ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.