“பள்ளிச்சட்டம்பி” படக்​குழு​வுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது;

Update:2026-01-25 21:46 IST

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில் இதன் படப்​பிடிப்பு கேரள மாநிலம் இடுக்​கி​யில் உள்ள மலங்கரா நீர்த்​தேக்​கம் அருகே நடந்​தது. படப்​பிடிப்பு முடிவடைந்ததும் செட் அமைக்​கப் பயன்​படுத்​தப்​பட்ட பொருட்களை அங்​கேயே கொட்​டி​விட்​டுப் படக்​குழு​வினர் சென்றுவிட்​டனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து ‘பள்​ளிச்​சட்​டம்​பி’ படக்​குழு​வுக்​கு, இடுக்கி குடா​யத்​தூர் பஞ்​சா​யத்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்​தது. இதையடுத்து ஜேசிபி மூலம் அங்கு கொட்டப்பட்ட குப்​பைகளைப் படக்​குழு​வினர்​ அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்