மதுரை ரசிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்து பாராட்டியுள்ளார்.;

Update:2026-01-25 17:55 IST

50 ஆண்டுகளாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸானது. ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது 173 படத்தை ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்த ரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.

 இந்த நிலையில், அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கவுரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்