'தேரே இஷ்க் மே என்னை ரொம்ப பாதித்தது' - கிரித்தி சனோன்
இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.;
சென்னை,
தேரே இஷ்க் மே பட அனுபவத்தைப் பற்றி கிரித்தி சனோன் மனம் திறந்து பேசியுள்ளார். இது அவரது கெரியரில் மிகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதித்த படங்களில் ஒன்று என்று கூறினார்.
படத்தில் தனது கதாபாத்திரம் உணர்ச்சி ரீதியாக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்றும், படப்பிடிப்பு முடிந்தும் வாரக்கணக்கில் அது தன்னிடம் இருந்ததாகவும் கிரித்தி கூறினார்.
கிரித்தியின் இந்த கருத்து ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற 28 -ம் தேதி வெளியாகிறது.