நோராவின் கலக்கல் நடனம்....தம்மா படத்தின் புதிய பாடல் வெளியீடு
இப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
பாலிவுட் நடிகை நோரா பதேகி நடனமாடியுள்ள தம்மா படத்தின் புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ஹாரர் படம் ‘தம்மா ’. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிக்கிறனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. தில்பார் கி ஆன்கோன்கா என்ற இந்த பாடலில் நடிகை நோரா பதேகி நடனமாடி இருக்கிறார்.