''அதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு'' - நடிகர் பாலா

பாலா இப்போது ஒரு இலவச மருத்துவமனை கட்டிவரும் தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-08-30 17:11 IST

சென்னை,

சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அப்படி தான் பாலா இப்போது ஒரு இலவச மருத்துவமனை கட்டிவரும் தகவல் வெளியாகியுள்ளது.

''இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு. 6 வருட உழைப்பில் ஒரு இடம் வாங்கினேன். வீடு கட்டதான் வாங்கினேன், ஆனால் வீடு கட்டி வாழ்ந்தால் நான் மட்டும்தான் சந்தோஷமாக இருப்பேன். அதே இலவச மருத்துவமனை கட்டினால் ஒரு நாளைக்கு 100 ஏழை மக்கள் சந்தோஷமால இருப்பாங்க'' என்று பாலா கூறினார்.

தற்போது பாலா ''காந்தி கண்ணாடி'' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார், இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்