’அது நான் இல்லை’...எச்சரித்த நடிகை அதிதி ராவ்
அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் மோசடி குறித்து முக்கியமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
அதிதி ராவ், தற்போது தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் மோசடி குறித்து முக்கியமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனது பெயரில் யாரோ ஒருவர் வாட்ஸ்அப்பில் போட்டோஷூட் வாய்ப்புகளை வழங்குவதாக ஏமாற்றி வருகிறார். அது நான் இல்லை.
எனக்கு தனிப்பட்ட தொலைபேசி எண் இல்லை. வேலை சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட எண்ணை பயன்படுத்த மாட்டேன். எனது குழு மூலம் நான் உங்களைத் தொடர்புகொள்வேன். எனவே அந்த எண்ணிலிருந்து ஏதேனும் செய்திகள் வந்தால், பதிலளிக்க வேண்டாம்' என்று அதிதி ராவ் இன்ஸ்டாகிராமில் எச்சரித்துள்ளார்.