நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா
நடிகை திரிஷா தனது நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.;
சென்னை,
தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் மற்று தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம்.
சமீபத்தில் திரிஷாவின் திருமண செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கில் எத்தனையோ வெற்றி படங்களில் நடித்து கொடிகட்டி பறக்கிறார். தற்போது தமிழில், சூர்யாவுடன் கருப்பு படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடம் விஸ்வம்பரா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், திரிஷா தனது நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.