'விடாமுயற்சி' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
நடிகர் அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் 2வது பாடல் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.
நடிகர் அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
'விடாமுயற்சி' படத்தின் 2வது பாடல் நாளை காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.