''கேஜிஎப்'' பட நடிகர் காலமானார்
அவரது மறைவுக்கு திரையுலகினர், சக நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
கன்னட திரைத்துறையின் பிரபல துணை நடிகர் தினேஷ் மங்களூரு(55) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மூளைப் பக்கவாதத்தால் குந்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார்.
தினேஷ் மங்களூருவின் மறைவு கன்னட திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், சக நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினேஷின் உடல் நாளை லக்கேரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினேஷ் மங்களூர் 'ஆ டிங்கி', 'கேஜிஎப்', 'உளிதவரு கண்டந்தே', 'கிச்சா', 'கிரிக் பார்ட்டி' , 'ரிக்கி', 'ராணா விக்ரமா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.