மலையாள திரை உலகில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் முதல் நடிகை
நடிகை மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.;
கொச்சி,
தமிழ், மலையாளம் மற்றும் தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் மஞ்சு வாரியர். இவர், வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதியுடன் விடுதலை படத்திலும் அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் 10 வருடங்கள் அவருக்கு இடைவெளி ஏற்பட்டாலும் மீண்டும் திரும்பி வரும்போது அவருக்குரிய இடம் அப்படியே இருந்தது. அந்த இடத்தை யாரும் நிரப்ப முடியாமல் வெற்றிடமாகவே இருந்தது. மலையாள ரசிகர்கள் அவரது இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருந்தனர்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார். மலையாளத்தில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் முதல் கதாநாயகி இவர்தான். அவரது சொத்து மதிப்பும் சுமார் ரூ.142 கோடி என மணி கண்ட்ரோல் அறிக்கை கூறுகிறது.