முகமது குட்டி.. மம்முட்டி ஆனது எப்படி? பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்முட்டி

எனக்கு பெயர் வைத்தவரை ரகசியமாக பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தேன் என மம்முட்டி பேசினார்.;

Update:2025-11-29 17:27 IST

மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்முட்டியின் இயற்பெயர் ‘முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்’ ஆகும்.

உடல்நலப் பிரச்னைகளிலிருந்து குணமாகி தற்போது படப்பிடிப்புகளிலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார் மம்முட்டி . சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்முட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

மம்முட்டி பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது. ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. நண்பர் ஒருவர் என்னுடைய அடையாள அட்டையைப் பார்த்தார். அவர் என்னிடம் முகமது குட்டி என்கிற பெயரைச் தவறாகப் படித்து 'உங்களுடைய பெயர் மம்முட்டியா?' எனக் கேட்டார். அப்போதிருந்து நண்பர்கள் அனைவரும் என்னை மம்முட்டி என அழைக்கத் தொடங்கினார்கள்.

அப்போது எனக்கு பெயர் வைத்தவர் இப்போது இங்குதான் இருக்கிறார். அவருடைய பெயர் சசிதரன். பலர் எனக்கு பெயர் வைத்த கிரெடிட்ஸை எடுத்துக்கொண்டார்கள். அதைப் பற்றி கட்டுரைகளும் செய்தித்தாள்களில் எழுதினார்கள். ஆனால் உண்மையில் எனக்கு மம்முட்டி எனப் பெயர் வைத்தவர் இவர்தான். நான் இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன். பல ஆண்டுகளாக இவரை மறைத்து வைத்திருந்தேன்” எனப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்