திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்

கோவிலில் அமர்ந்து பாபி சிம்ஹா சிறிது நேரம் தியானம் செய்தார்;

Update:2025-11-29 19:18 IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான‘பீட்சா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி'.சூது கவ்வும்', 'பகலவன்', 'ஜிகர்தண்டா', 'மகான்' , இந்தியன் 2, கருப்பன், பேட்டை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பாபி சிம்ஹா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் அமர்ந்து அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்