“அட்டகத்தி” தினேஷின் “கருப்பு பல்சர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தினேஷ் நடிப்பில் உருவான ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது.;

Update:2026-01-13 15:06 IST

சென்னை,

பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். ‘அட்டகத்தி’ படத்தின் பிரமாண்ட வெற்றியால் தினேஷ் பெயருக்கு முன் படத்தின் பெயர் இடம்பெற்றது. தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந் நிலையில், ‘கருப்பு பல்சர்’ படம் வருகிற 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்