“பராசக்தி” படத்தில் நடிச்சது ரொம்ப திருப்தியா இருக்கு - நடிகை ஸ்ரீ லீலா
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது.;
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ . சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா “என்னுடைய டான்ஸ், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. ஆனால் ‘பராசக்தி’ படம் மூலமாக, முதல்முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன..இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச்சரியான அறிமுகப் படம் எனத் தோன்றுகிறது. மிகவும் திருப்தியாக உள்ளது” என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.