விஜய்யின் “தெறி” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

ஜனவரி 15ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ ரீ-ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார்;

Update:2026-01-13 17:34 IST

அட்லி இயக்​கிய ‘தெறி’ ​படத்​தில் விஜய்​யுடன் சமந்​தா, எமி ஜாக்​சன், ராதி​கா, இயக்​குநர் மகேந்​திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்திருந்தனர். இப்​படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளி​யானது. இதற்​கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைத்​திருந்​தார்.

இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார்

இந்நிலையில், ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்