இதுவரை இல்லாத அளவு.. கூலி படத்தின் ஓவர்சீஸ் பிஸ்னஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு'என்ற முதல்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த பாடலை அறிவு, அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் (ஓவர்சீஸ் பிஸ்னஸ்) இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.