'தி ராஜா சாப் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்' - சமுத்திரக்கனி
பிரபாஸின் தி ராஜா சாப் படம் பற்றிய சமுத்திரக்கனியின் கருத்துகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.;
சென்னை,
காந்தா படத்தில் தனது நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்று வரும் சமுத்திரக்கனி, பிரபாஸின் தி ராஜா சாப் படம் பற்றிய தனது கருத்துகளால் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
காந்தா படத்தின் புரமோஷனின்போது பேசிய சமுத்திரக்கனி, ’தி ராஜா சாப் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இயக்குனர் மாருதி முற்றிலும் மாயாஜாலமான ஒரு உலகத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் பிரபாஸை புதுவிதமான அவதாரத்தில் காண்பிக்கும்’ என்றார்.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது