''கூலி'' - பூஜா ஹெக்டேவின் ''மோனிகா'' பாடல் வெளியீடு

இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-07-11 18:16 IST

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் ''கூலி'' படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே நடனமாடி உள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதில், பூஜாவுடன் சவுபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்