ஒவ்வொரு இளைஞரின் கதை...ஸ்ரீ விஷ்ணுவின் புதிய படம் அறிவிப்பு
இப்படத்தை சன்னி சஞ்சய் இயக்குகிறார்;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஸ்ரீ விஷ்ணு. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'சிங்கிள்'.
இவானா, கெட்டிகா ஷர்மா கதாநாயகிகளாக நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஸ்ரீ விஷ்ணு 'ஆய்' இயக்குனர் கே. அஞ்சியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சன்னி சஞ்சய் இயக்குகிறார். ஒவ்வொரு இளைஞரின் கதை... என்ற தலைப்பில் போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.