மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் "பேட்ரியாட்" படத்தின் டீசர் வெளியானது!
மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.;
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் அவர்கள் இணைந்து நடிக்கும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை 'டேக் ஆப்', 'மாலிக்' போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
இதில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு "பேட்ரியாட்" (patriot- தேசபக்தன்) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பேட்ரியாட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.