நடிப்புக்காக படிப்பை நிறுத்தியவர்...இப்போது பிரபல நடிகை - யார் தெரியுமா?
இப்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார்.;
சென்னை,
நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது படிப்பையே ஒரு நடிகை பாதியில் நிறுத்தி சினிமாவில் நுழைந்திருக்கிறார். இப்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா?. வேறு யாரும் இல்லை, அனுபமாதான்.
அனுபமா பரமேஸ்வரன் தனது 19 வயதிலேயே கதாநாயகியானார். மலையாளப் படமான 'பிரேமம்' மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் குறைவான நேரம் மட்டுமே தோன்றினாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரேமம் படத்திற்குப் பிறகு, அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்தன. இதன காரணமாக அனுபமா தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
குறிப்பாக பிற மொழிகளில் இருந்தும் அவருக்கு அழைப்பு வந்ததால், அவர் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்த முடிவெடுத்தார். கடைசியாக அனுபமா, மாரி செல்வராஜின் பைசன் படத்தில் நடித்திருந்தார்.