ஷர்வானந்தின் ’பைக்கர்’...வெளியானது முதல் பாடல் அப்டேட்

இந்தப் படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-10 15:17 IST

சென்னை,

நடிகர் ஷர்வானந்த்- நடிகை மாளவிகா நாயர் இணைந்து, ஸ்போர்ட்ஸ் ஆக்‌சன் படமான பைக்கரில் நடித்து வருகிறார்கள். அபிலாஷ் ரெட்டி கங்காரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியானது.

தலைப்பை போலவே, இந்தப் படம் பந்தயத்தில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு பைக்கரை சுற்றி வருகிறது. மூத்த நடிகர் ராஜசேகர் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் உப்பளபதி பிரமோத் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ’’ப்ரெட்டி பேபி’’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடலின் புரோமோ நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்