“அரசன்” படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் கொடுத்த அப்டேட்

சிம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.;

Update:2025-11-10 15:00 IST

தக் லைப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கிடையில், இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘வட சென்னை’திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகவுள்ளது.

இந்நிலையில், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி துவங்கவுள்ளதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இதற்கான செட் அமைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

‘அரசன்’ படத்தில் ‘வட சென்னை’ செந்திலாக இடம்பெற விரும்புகிறேன், இயக்குநர் வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். ‘வட சென்னை’ படத்தை முதலில் பார்த்தபோது, நான் சற்று வருத்தப்பட்டேன், நடிக்கும்போது நான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை என்று. மீதம் உள்ள காட்சிகளை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நடிகர் கிஷோர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்