’காலை எழுந்தவுடனே அதை செய்வேன்’- ஸ்ரீலீலா

தன்னை பற்றிய சில விஷயங்களை ஸ்ரீலீலா பகிர்ந்தார்.;

Update:2025-10-28 10:45 IST

சென்னை,

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீலீலா, சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில், தன்னை பற்றிய ஆச்சரியமளிக்கும் சில விஷயங்களை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், "திரையில் நான் ஒரு மாஸான தோற்றத்தில் இருந்தாலும், எனக்கு மெல்லிசை மற்றும் காதல் பாடல்கள் பிடிக்கும்.  காலை எழுந்தவுடனே பழைய தெலுங்கு பாடல்களை கேட்பேன். அந்த பாடல்கள் என் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் அமைதியை தருகின்றன’’ என்றார்.

ஸ்ரீலீலா தற்போது நடித்துள்ள படம் ‘மாஸ் ஜதாரா’. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்