டோலிவுட் படப்பிடிப்பு நிறுத்தம்...''தமிழ் படங்களுக்கு பாதிப்பு இருக்குமா?'' - ஆர்.கே செல்வமணி விளக்கம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டோலிவுட்டில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது;
சென்னை,
டோலிவுட்டில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் தமிழ் படங்களுக்கான படப்பிடிப்புகள் வழக்கம்போல நடந்துவருவதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே .செல்வமணி கூறி இருக்கிறார்
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தமிழ் படங்களின் படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தமிழ், தெலுங்கு என இரு மொழி சார்ந்த படம் எடுக்கும் பட்சத்தில்தான் பிரச்சினை இருக்கும் எனவும் தெரிவித்தார்.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டோலிவுட்டில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.